திருமணத்திற்கு ஜாதகத்தை விட ரத்த பரிசோதனை அவசியம்- நடிகை சுஹாசினி

 
suhasini

திருமணத்திற்கு 'சாதி' மற்றும் 'ஜாதகம்' பார்ப்பதைவிட இரத்த பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நடிகை சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

இதனைக் குறைபாடு என்று சொல்வதை விட, கண்டிஷன் என்றே சொல்லலாம். என்னுடைய வயதுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் நான் இரத்தம் கொடுத்து வருகிறேன்.

உலக தலசீமியா தினத்தை ஒட்டி சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை சுஹாசினி மணிரத்னம், “ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை இரத்த தானம் செய்ய வேண்டும். மருத்துவர்கள் இருப்பதால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம். ஜாதகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ரத்த பரிசோதனை செய்து திருமணம் செய்ய வேண்டும். ரத்த பரிசோதனை செய்த பின்னர் மனம் முடித்தால் நோய் பாதிப்புகளை தவிர்க்க முடியும்” என்றார்.