திடீரென சீறிய கடல்.. சென்னையில் சாலையில் பரபரப்பு!

 
Q

ஆந்திராவின் பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே அர்னாப் புயல் மிக தீவிர புயலாக தற்போது கரையை கடக்கத் தொடங்கி உள்ளது. புயல் முன்கூட்டியே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் புயல் நகர்வதால் வடசென்னை மற்றும் திருவள்ளூர் கடற்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

குறிப்பாக, சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில், பாறைகளை கடந்து நெடுஞ்சாலையில் கடல் அலைகள் சீறிப்பாய்ந்தன. இதைக்கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் அலையின் தாக்கத்தால் கவிழ்ந்தன. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். கடற்கரையை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

கடல் சீற்றம் காரணமாக எண்ணூர் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி, மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன