திடீரென தொழுகை செய்த குரங்கு..! பள்ளிவாசலில் நிகழ்ந்த அதிசயம்..!
இணையதளங்களில் அவ்வப்போது விலங்குகளின் விசித்திரமான மற்றும் ஆச்சரியமான செயல்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு பள்ளிவாசலுக்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று, அங்குள்ள முஸ்லிம்களுடன் இணைந்து அமைதியாகத் தொழுகை செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மனிதர்கள் செய்வதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையுடைய குரங்கு, மிக நேர்த்தியாக மண்டியிட்டு அமர்ந்து வழிபாட்டில் ஈடுபடுவது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "பக்திக்கு மொழி கிடையாது, இது இறைவனின் படைப்பில் ஒரு அதிசயம்" எனப் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். பொதுவாகக் கூட்டமான இடங்களைக் கண்டால் மிரண்டு ஓடும் குரங்குகள், எந்தவித அச்சமும் இன்றிப் புனிதமான இடத்தில் இப்படி அமைதியாக அமர்ந்து வழிபாட்டுச் சடங்குகளைப் பின்பற்றுவது ஒரு அபூர்வ நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
பள்ளிவாசலில் திடீரென வந்து தொழுகை செய்வது போல் குரங்கு செய்த செயல் ..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..! #monkey #Mosque #swamimalai #thanthitv pic.twitter.com/tUHI05hYu3
— Thanthi TV (@ThanthiTV) February 26, 2026