சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் மின் தடை- மின்வாரியம் விளக்கம் விளக்கம்

 
assembly

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் காலை முதல் மின்சாரம் இல்லாததால் அலுவலர்கள் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து விசாரித்தபோது, முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் 4 மின் பேனல்களில் ஒன்றில் B-Phase-ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் காலை 11.25 மணிக்கு மின்சாரம் முழுமையாக சீர் செய்யப்பட்டது. தற்போது அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தளங்களில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், முதல் தளத்தில் மட்டும் ஏற்பட்ட சிறு பழுது உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.