திடீர் இயற்கை சீற்றம்..! தூத்துக்குடி அருகே திடீரென வீசிய சுழற்காற்று.. பறந்த சுங்கச்சாவடி கூரைகள்..!
தூத்துக்குடி வாகைகுளம் அருகே திடீரென ஏற்பட்ட டொரன்டோ சுழல் காற்று சுங்கச்சாவடி கூரைகள் முழுவதும் காற்றின் வேகத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் பிய்த்துக் கொண்டு சென்றதால் சுங்கச்சாவடி முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அதிசய நிகழ்வை அங்கே இருந்தவர்கள் செல்போனில் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது அது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த சுழல் காற்று காரணமாக தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி கூரைகள் அனைத்தும் காற்று மேலே எழுந்ததில் தாக்குப் பிடிக்க முடியாமல் பெயர்ந்து முற்றிலுமாக கிழிந்தது இதன் காரணமாக சுங்கச்சாவடி கணினி இணைப்புகள் அனைத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் சுங்கச்சாவடி முற்றிலுமாக முடங்கியது
மேலும் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தீம் பார்கிலும் இந்த சூறாவளி காற்று காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலுமாக சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
தூத்துக்குடி வாகைகுளம் அருகே திடீரென வீசிய சுழற்காற்று..
— Polimer News (@polimernews) June 21, 2026
காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல், வாகைகுளம் சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் பிய்த்துக் கொண்டு பறந்ததால் சுங்கச்சாவடி முற்றிலுமாக சேதம்..#Thoothukudi | #Tornado | #TollPlaza | #PolimerNews pic.twitter.com/y9D6GiNoc6

