வால்பாறையில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் திடீர் தீ- 8 வீடுகள் நாசம்

 
fire

கோவை மாவட்டம் வால்பாறையில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தி எட்டு வீடுகள் எரிந்து சாம்பலானது.

fire

பழைய வால்பாறை எஸ்டேட்டில் உள்ள குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். அவர்களின் வீடுகளில் இரவு 11 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.  தீயை அணைக்க முயற்சித்தும் பலன் இல்லாத நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளுக்கு தீ மளமளவென பரவியது. பரண்களில் வைக்கப்பட்ட  விறகு தீ பிடித்ததால், தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் தீ பரவியது.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் அலறியபடி வெளியே வந்து கூச்சலிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்துவிட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.