போக்குவரத்துத் துறை - போலீஸாரிடையே மோதல் - துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை!!
May 25, 2024, 12:35 IST1716620722718
போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு உரிய தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

நான்குநேரியில் ஆறுமுகபாண்டியன் என்ற காவலர் சீருடையில் இருந்தபடி டிக்கெட் எடுக்க மறுத்ததால் பிரச்சினை வெடித்தது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலருக்கு இலவச பயணம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக அரசு பேருந்துகளுக்கு தமிழக போலீசார் அபராதம் விதிக்கத் தொடங்கியதால் அதிகரித்த சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இரு தரப்பு பிரச்சினைக்கு தீர்வு காண ஆலோசனை நடத்தப்படுகிறது.


