அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்களிடம் விசாரணை தேதி திடீர் மாற்றம்
ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரிடம் ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது.
ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகியோரிடம் விளக்கம் கேட்கும் விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. நாளை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். இபிஎஸ் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரிடம் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் ஏற்கனவே 3 முறை விசாரித்த நிலையில், அதிமுகவிலிருந்து விலகி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததை ஏற்க இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் விசாரணை நடத்த சபாநாயகர் திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்திய பாமா ஆகியோருக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

