தமிழ்நாடு அரசிதழில் திடீர் திருத்தம் - அமைச்சர் ரமேஷ் பெயர் மாற்றம்
தமிழக அமைச்சரவையில் முக்கிய திருத்தம் செய்து தமிழக அரசு சிறப்பு அரசிதழ் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் வெளியான http://G.O.Ms.No.343, 345, 366 ஆகிய அரசாணைகளில் அமைச்சர்களின் நியமனம் மற்றும் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக அறிவிக்கப்பட்டது. அதில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் பெயர் "Thiru. Ramesh" (திரு. ரமேஷ்) என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதை திருத்தி (Erratum), ஆங்கிலத்தில் "Thiru. http://S.Ramesh" என்றும், தமிழில் "திரு. சீ.ரமேஷ்" என்றும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இனி வரும் அனைத்து அரசு ஆணைகள், கோப்புகள், அரசிதழ்களில் இந்த புதிய பெயரே இடம்பெறும் என தலைமைச் செயலாளர் சாய்க்குமார் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இது சாதாரண எழுத்துப்பிழை திருத்தமா அல்லது அமைச்சரின் முழுப்பெயரை முறைப்படுத்தும் நடவடிக்கையா என்பது குறித்து அரசு வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது.

