"நாசமா போ , செத்துப் போ" - பயில்வான் ரங்கநாதனுக்கு சாபம் கொடுத்த சுசித்ரா
நடிகரும், சினிமா விமர்சகருமாக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமா துறையில் உள்ள பிரபலங்களை பற்றி அவதூறாக பேசி வருகிறார் இதனால் ரங்கநாதனுக்கு எதிராக பல நடிகைகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தனியார் youtube சேனலுக்கு பேட்டியளித்துள்ள பிரபல பாடகியான சுசித்ரா, பயில்வான் ரங்கநாதன் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், நான் பல ஆண்டுகளாக சினிமா துறையில் பாடல்களை பாடி இருக்கிறேன். ஒருமுறை கூட பயில்வான் ரங்கநாதனை நான் நேரில் சந்தித்ததில்லை. அவர் என்னைப் பற்றி தொடர்ந்து தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இதைப் பற்றி அவர் பேசி வருகிறார். அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் கிடையாது. என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணம் கொடுத்து அவர் இப்படி பேச வைப்பதாக க நான் சந்தேகப்படுகிறேன்.
அவர் ஒரு பத்திரிக்கையாளரே கிடையாது. சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் செய்து கொடுக்கும் ஏஜென்டாக அவர் வேலை செய்தார். அதை கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததே பயில்வான் ரங்கநாதன் தான். அந்த கலாச்சாரத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது அவர்தான். அதன் பிறகு தான் படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் அவர் நடித்து வந்தார். அவரைப் பற்றி பேசினாலே எனக்கு கோபம் வருகிறது. அவர் சீக்கிரமாக சாக வேண்டும். எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நடுரோட்டில் கதறி அழுது தினம் தினம் அவர் சாக வேண்டும். அவருக்கு நான் சொல்ல வருவது நாசமா போ , செத்துப் போ, அப்போதான் அவருடைய மகள் உருப்படுவாங்க என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.