கிளப்பில் குடிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி
தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில், TASMAC நிர்வாகம் கிளப்களுக்கு (FL2 Licensees) வழங்கி வந்த சலுகை விலையை (மானியம்) ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் உள்ள FL2 உரிமம் பெற்ற கிளப்கள் (Clubs - உதாரணம்: Madras Club, Coimbatore Cosmopolitan Club, Madurai Tamukkam Club போன்றவை) TASMAC மொத்த விற்பனை டிப்போக்களில் இருந்து மதுபானங்களை வாங்கும் போது, சாதாரண ரீடெயில் கடைகளை (Retail Vending Shops) விட குறைவான Issue Price-ல் வாங்கி வந்தன. இது ஒரு வகையான மானியம் போல கிளப்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் TASMAC நிறுவனத்தின் 224-வது இயக்குனர் குழு கூட்டம் 29.09.2026 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் பெருக்க நடவடிக்கையாக (Revenue Augmentation Measure) ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இனி கிளப்களுக்கு தனி சலுகை விலை கிடையாது. ரீடெயில் கடைக்கு என்ன விலையோ, அதே விலை தான் கிளப்புகளுக்கும். இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்து பாட்டில்களுக்கும் ரூ.10 செஸ் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1.11.2026 முதல் குவாட்டர், ஆஃப், ஃபுல், பீர் என எந்த பாட்டிலாக இருந்தாலும் ரூ.10 கூடுதலாக விலை உயர்கிறது. இனி MRP லேபிளில் MRP (inclusive of all taxes and Rs.10/- cess)" என்று அச்சிட வேண்டும். சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள பெரிய கிளப்களில் மது அருந்துபவர்களுக்கு இனி பில் தொகை அதிகரிக்கும். கிளப் நிர்வாகங்கள் இந்த கூடுதல் விலையை வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் வசூலிக்கும்.

