திடீரென விஜய்க்கு ஆதரவு குரல் கொடுக்கும் சுப்பிரமணிய சுவாமி

 
சுப்பிரமணியன் சுவாமி

தவெக தலைவர் விஜையை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநருக்கு சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

vijay


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் தவெக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்த தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து விஜய் நாளை காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கவிருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணிய சுவாமி தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், TVK கட்சியே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தபோதிலும், அக்கட்சியின் தலைவர் திரு. விஜய் அவர்களை ஆட்சி அமைப்பதற்குத் தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அழைக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் நலன் கருதி, தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக TVK தலைவரை அழைத்து மாநில அமைச்சரவையை அமைக்க உத்தரவிட வேண்டும். அவரே முதலமைச்சராகப் பொறுப்பேற்று, சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.