அதிக வட்டி தருவதாக கூறி பணமோசடி - சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

அதிக வட்டி தருவதாக 587 பேரிடம் ₹47.68 கோடி மோசடி செய்த வழக்கில் விஸ்வபிரியா பைனான்ஸ் என்ற நிதி நிறுவன இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விஸ்வபிரியா பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சுபிக்ஷா சுப்பிரமணியன் தங்களது நிதி நிறுவனத்தில் பணத்தை டெபாசிட் செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அதிக வட்டி தருவதாக 587 பேரிடம் ₹47.68 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், அதிக வட்டி தருவதாக மோசடி செய்த வழக்கில் விஸ்வபிரியா பைனான்ஸ் என்ற நிதி நிறுவன இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விஸ்வபிரியா பைனான்ஸ் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் 9 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் ₹191.98 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் இதில், ₹180 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க தீர்ப்பு வழங்கியுள்ளது.