சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - ஓபிஎஸ் , தினகரன் ட்வீட்

 
tn

சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளையொட்டி ஓபிஎஸ், தினகரன் இருவரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்னொரு பிறவி எடுத்தால் அதில் தமிழனாக பிறக்க வேண்டும்” என்று சொல்லி தமிழர்களையும், தமிழ்நாட்டையும் உள்ளார்ந்து நேசித்த வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று!“ தாய்நாட்டின் மீது கொண்ட நேசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்து, இந்திய மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர் நேதாஜியின் தீரத்தையும் தியாகங்களையும் வணங்கிடுவோம்.! என்று குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “இன்னொரு பிறவி எடுத்தால் அதில் தமிழனாக பிறக்க வேண்டும்” என்று சொல்லி தமிழர்களையும், தமிழ்நாட்டையும் உள்ளார்ந்து நேசித்த வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.