மதுரை விமானநிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூல் - சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
மதுரை விமானநிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மதுரை விமானநிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு வருவது குறித்து விமானநிலைய ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பொழுது அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். கீழே உள்ள காணொலி அந்த குற்றச்சாட்டின் உண்மையை அம்பலப்படுத்துகிறது.
மதுரை விமானநிலையத்தில்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 30, 2024
பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக வரும் குற்றச்சாட்டு வருவது குறித்து விமானநிலைய ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பொழுது அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.
கீழே உள்ள காணொலி அந்த குற்றச்சாட்டின் உண்மையை அம்பலப்படுத்துகிறது.… pic.twitter.com/xCt9l8Q7Qn
இதற்கு பொறுப்பான ஒப்பந்தக்காரர் மற்றும் வசூலித்த நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக மேலாளரிடம் விளக்கம் கோரப்பட வேண்டுமென மதுரை விமானநிலைய இயக்குநரை கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.