"பாசிசத்துக்கு எதிரான வலிமைமிக்க கேடயங்களே தேசிய இனங்களின் தனித்த அடையாளங்கள்" - சு.வெங்கடேசன் எம்.பி.,

 
mp

ஏறுதழுவுதலுக்கான அரங்கை  திறந்துவைக்க வருகை தரும் முதல்வரை எம்.பி.சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்.

tn

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் சுமார் 66 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டில் அரங்கினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார்.  66 ஏக்கரில் ரூபாய் 64 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் தற்போது கட்டப்பட்டுள்ளது.  கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்கிறார்.  

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நேற்றைய தினம் மதுரையில் பஞ்சாபியர்களின் வீரவிளையாட்டான கட்கா போட்டிகள் நிறைவடைந்தன.

இன்றைய தினம் மதுரையில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதலுக்கான அரங்கை 
@CMOTamilnadu
 திறந்துவைக்க வருகைதருகிறார்.

ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிரான வலிமைமிக்க கேடயங்களே 
தேசிய இனங்களின் 
தனித்த அடையாளங்கள்.

கொண்டாடுவோம்.
முதல்வரே, வருக… வருக! என்று குறிப்பிட்டுள்ளார்.