திடீர் நெஞ்சுவலி... சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி

 
su venkatesan

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

su venkatesan

விழுப்புரத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும், ஒரு மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 24வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3-5, 2025 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும்  மத்தியக்குழு, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலிமிருந்து 550க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.