மீண்டும் மதுரையில் போட்டியிடுகிறார் சு.வெங்கடேசன்!

 
venkatesan

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது.  இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகளுக்காக புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.  

tn

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மதுரை மக்களவை தொகுதியில் தற்போது எம்.பியாக உள்ள சு.வெங்கடேசனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதேபோல் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சச்சிதானந்தம் போட்டியிடவுள்ளார்.