முட்டாள் இது தமிழ்நாட்டிற்கு இல்லை - முதல்வர் ஸ்டாலினை திட்டிய சுப்பிரமணிய சுவாமி

 
tn

2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.  2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பொளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது. . எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை.  

tn

குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 

stalin
இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் சிஏஏ  சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.


 

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி முதல்வர் ஸ்டாலினின் சிஏஏ சட்டம் தொடர்பான கருத்துக்கு  பதிலளிக்கும் வகையில், முட்டாள். இது காஷ்மீர் மற்றும் வடகிழக்குக்கானது, தமிழகத்திற்கு அல்ல என்று பதிவிட்டுள்ளார்.