பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு.. விபத்தில் சிக்கிய பதைக்கவைக்கும் காட்சிகள் வெளியீடு..
இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் ஸ்டன்ட் மாஸ்டர் விபத்தில் சிக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
‘தங்கலான்’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் அடுத்து இயக்கி வரும் படம் ‘வேட்டுவம்.’ பா.ரஞ்சித்தின் நிலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுபாக நடந்து வருகிறது. அந்தவகையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நாகப்பட்டிணம் மாவட்டம் விழுந்தமாவடியில் நடந்து வருகிறது.
இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று நேற்று படமாக்கப்பட்ட நிலையில், கார் ஸ்டண்ட் மாஸ்டரான சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். கார் ஸ்டண்ட் மாஸ்டர் காரிலிருந்து குதிக்கும்போது தவறி விழுந்ததாகவும், அப்போது அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது கார் ஸ்டண்டின் போது விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காட்சியில், வேகமாக வரும் கார் ஒரு சிறிய தடுப்பில் மோதி மேலே பறந்து சென்று பின்னர் கீழே கவிழ்ந்து விழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், இந்த ஸ்டண்டின்போது மோகன்ராஜ் விபத்தில் சிக்கினார். தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டரை காரில் இருந்து படக்குழுவினர் உடனடியாக மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Watch | பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்புத் தளத்தில் விபத்து. ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் விபத்தில் சிக்கிய காட்சி.
— Sun News (@sunnewstamil) July 14, 2025
கார் மேலே பறந்து கீழே விழுந்ததில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.
ஸ்டண்ட் மாஸ்டரை காரில் இருந்து படக்குழுவினர் மீட்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.… pic.twitter.com/YlXl1HjTea