+2 தேர்வில் பாட வாரியாக 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இதோ!!

 
tnt

+2 தேர்வில் பாட வாரியாக 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

tn

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07% அதிகம்) அடைந்துள்ளனர். http://tnresults.nic.in, http://dge.tn.gov.in  ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்.மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்,  94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்

tn

இந்நிலையில் முக்கிய பாடங்களில் 100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை பட்டியலில்,  தமிழ் பாடத்தில் 35 பேரும் ,ஆங்கிலத்தில் ஏழு பேரும் இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும் , நூற்றுக்கு நூறு  மதிப்பெண் பெற்றுள்ளனர்.  உயிரியலில் 652 பேரும் ,கணிதத்தில் 2057 பேரும் ,தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும் , கணினி அறிவியலில் 696 பேரும் , வணிகவியலில் 6,142 பேரும் , கணக்குப்பதிவியலில் 1547 பேரும், பொருளியலில் 3,29 பேரும்,  கணினி  பயன்பாடுகளில் 2251 பேரும்,  வணிக கணிதம் மற்றும் புள்ளிகளில் 210 பேரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.