அரசு பள்ளியில் மேசை, நாற்காலியை அடித்து உடைத்த மாணவர்கள்!

 
Students

அரசு பள்ளியின் வகுப்பறை ஒன்றில் உள்ள மேசை, நாற்காலிகளை, மாணவர்களும், மாணவிகளும் அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருவது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்கள், செய்முறை தேர்வை முடித்த கையோடு பள்ளியில் அட்டகாசம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ஏதோ கலவரம் நடந்ததுபோன்று, கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்குகின்றனர்.  மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி, காகிதங்களை கிழித்தெறிகின்றன. கிழித்தெறிந்த காகிதங்கள் சிதறி கிடப்பதை பார்க்கும் போது ஏதோ வன்முறை நடந்த இடமோ என தோன்றுகிறது.

student

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சம்மந்தபட்ட  பள்ளிக்கு நேரில் சென்ற மாரண்டஅள்ளி போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் யார்? இந்த கலவரத்துக்கு காரணம் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.