“சார்... உங்க கையால நான் பட்டம் வாங்க விரும்பல! அவர் கையால வாங்கிகிறேன்”- அமைச்சர் ராஜ்மோகனிடம் மாணவன் கோரிக்கை

 
“சார்... உங்க கையால நான் பட்டம் வாங்க விரும்பல”- அமைச்சர் ராஜ்மோகனிடம் கோரிக்கை வைத்த மாணவன்

சார் எனக்கு ஒரு கோரிக்கை பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த மாணவனின் வீடியோ வைரலாகிவருகிறது.


சென்னை, கோட்டூர்புரம் தமிழ் இணைய கல்விக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு இதழியல் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா அக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார். அப்போது, மேடையில் இருந்த அமைச்சரிடம் மாணவர் ஒருவர் “நான் துணைவேந்தர் கையாலேயே சான்றிதழை வாங்கிக் கொள்ளலாமா?” என்று அன்பாகக் கோரிக்கை விடுத்தார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.