காதல், கர்ப்பம், கைது! 2k கிட்ஸ்களின் அட்டகாசம்

 
love

திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவியும் (வயது 17), விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தை சேர்ந்த தயாளன் (வயது 21) என்பவரும் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பழகியுள்ளனர்.

கவிதை - என் முன்னாள் காதலி - பரத் - www.Chillzee.in | Read Novels for free  | Romance - Family | Daily Updated Novels

இந்நிலையில் ப்ளஸ் டூ மாணவி இரண்டரை மாதம் கர்ப்பம் ஆன நிலையில், அவர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தயாளனை கைது செய்து
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் மாதலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவரும், கலசப்பாக்கம் அடுத்த சங்கர் பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அஜித் குமார் (வயது 20) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் நடந்த பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். அஜித் குமார் 14 வயது மாணவியின் புகைப்படத்தை சமூக வளைதலங்களில் பரப்பி உள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் அஜீத் குமாரை
கைது செய்த மகளிர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.