சாதிய அடையாளங்களோடு பள்ளிக்கு வரக்கூடாது - அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை

 
ச்

சாதி, மத அடையாளங்களோடு கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “சாதி, மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டி போட்டிவிட்டுத்தான் வருகிறேன். இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிற்குதான் இடம். சாதிய பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கயிறு கூட மாணவர்கள் பள்ளிக்கு கட்டிவரக்கூடாது. பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுக்கும் முறையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது.

தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும்.  மாணவர்களை போதையின் பாதைக்கு செல்லாமல் தடுப்போம். போதையின் பாதைக்கு சென்றுவிடாமல் தடுக்க எல்லா விஷயங்களையும் முன்னெடுக்க தயாராக இருக்கிறோம்.. பிரிவினையை வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் இங்கு இடமில்லை. தமிழகத்தில் 5,000 பள்ளிகளில் AI கோடிங் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்கு முன்னதாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். நடப்பு ஆண்டு தேர்ச்சி விகிதம் நன்றாக இருந்தாலும், அதனை மேலும் உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது” என்றார்.