தெரு தெருவாக தவெக கட்சி கொடி கட்டிய மாணவர்கள்!
ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் தவெக கொடிகளை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பிகளில் பள்ளி மாணவர்களை விட்டு கட்ட வைத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டி சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இருபுறமும் வேகமாக சென்று கொண்டிருந்த பொழுது சாலையை கடந்து ஆபத்தான முறையில் தடுப்பு சுவற்றில் ஏறி கம்பியில் தவெக கட்சிக்கொடி கட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பள்ளி மாணவர்கள வச்சு தவெக கட்சி கொடி கட்ட வச்சது தான் பொட்டு அங்கிள் சொன்ன அந்த மாற்றம் 👏👏👏 pic.twitter.com/lzWDUc5iDR
— D Force (@DforceOffl) June 22, 2026
இது பற்றி மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், தமிழ்நாடு மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் நடக்கும் அரசு பள்ளி மாணவர்களை வைத்து தனிப்பட்ட முறையில் கட்சி கொடி கட்ட தாங்கள் பிள்ளையை பெத்து போடவில்லை என்று வேதனை தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் பெற்றோர் புகார் கொடுத்தும் காவலர்கள் விசாரணை செய்யவில்லை. மேலும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் விசாரணை செய்யக்கூடாது யாரையும் தண்டிக்க கூடாது என்று காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. சீருடையில் பள்ளி மாணவர்களை கட்சிக் கொடிகளைக் கட்ட வைத்தவர்களை பள்ளி நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
.

