இதயம் முழுக்க பெண்கள்! நெட்டிசன்களை கிறுகிறுக்க வைத்த மாணவன்

 
இதயம் முழுக்க பெண்கள்! மாணவனின் இதய புகைப்படம் வைரல் 

தேர்வில் இதயத்தின் படத்தை வரைந்து பாகங்களைக் குறிப்பிடுக என கேட்கப்பட்ட கேள்விக்கு, மாணவர் ஒருவர் இதயத்தின் படம் வரைந்து, அதில் தன்னுடைய தோழிகளின் பெயர்களை பட்டியலிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

This student's heart diagram has the Internet rolling with laughter:  'Priya, Namita, Harita…' | Trending News - The Indian Express

திடீரென இணையத்தில் எப்போதே நேர்ந்த ஒரு சம்பவத்தின் வீடியோவோ, புகைப்படமோ வைரலாவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட இதய வரைபடமானது தற்போது 64.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

தேர்வில் கேட்கப்பட்ட இதயத்தின் படத்தை வரைந்து பாகங்களைக் குறிப்பிடுக என்ற கேள்விக்கு, மாணவர் ஒருவர் இதயத்தின் படம் வரைந்து, நான்கு பாகங்களிலும் ஹரிதா, பிரியா, ரூபா, நமீதா, பூஜா என தனது தோழிகளின் பெயர்களைக் குறித்திருக்கிறார். மேலும் அந்த பெண்கள் யார் என்பது பற்றிய குறிப்புகளையும் எழுதியுள்ளார். இதயத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு இதயத்தின் வலது ஆட்ரியத்தில் குறிப்பிட்டிருந்த ஹரிதா தன்னுடன் படிக்கும் வகுப்பு தோழி என்று குறிப்பிட்டுள்ளார். இடது ஆட்ரியத்தில் குறிப்பிட்டிருந்த பிரியா என்னுடன் எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்வார் என்றும், எனக்கு அவளைப் பிடிக்கும் என்றும் எழுதியுள்ளார்.

Student draws heart image, labels parts with names of girls, watch

இதயத்தின் வலது வென்ட்ரிக்கிளில் குறிப்பிட்டிருந்த பூஜா தனது முன்னாள் காதலி என்றும், அவளை என்னால் மறக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதயத்தின் இடது வென்ட்ரிக்கிளில் குறிப்பிட்டிருந்த ரூபா, ஸ்னாப் சாட்டில் என்னுடன் சாட்டிங் செய்வார். அவள் மிக அழகானவள் என்று தெரிவித்திருக்கிறார். தயத்தின் கீழ் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்த நமீதா, தனது உறவினரின் மகள் என்றும், அவளுக்கு நீண்ட கூந்தல், பெரிய கண்கள் இருக்கும் என்றும் கூறி நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலையை வரவழைத்துள்ளார்.