மாணவர்களுக்கு கிடைத்த ரூ.3 கோடி சர்ப்ரைஸ்.. அது என்ன போட்டித் தேர்வு?

 
1

மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் தகுதி தேர்வுகளே போட்டித்தேர்வுகள் என அழைக்கப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கியியல் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள் மற்றும் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் இதில் அடங்கும். லட்சக்கணக்கான மாணவர்கள் பங்குபெறும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற ஸ்பெஷல் பயிற்சிகளும், கட்டமைப்பு வசதிகளும் ரொம்பவே அவசியமாகும்.

இன்றைய பட்ஜெட்டில் மாணவர்களின் போட்டித்தேர்வு பயிற்சிகளுக்காக 3 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் எளிய பொருளாதார பின்னணி கொண்ட மாணவர்கள் அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பிரைவேட் பயிற்சி மையங்களை அணுக முடியாத நிலைமையை போக்கி, அரசு சார்பிலேயே உயர்தர பயிற்சி அளிப்பதற்கு இந்த நிதி பயன்படும்.