அரசுப் பள்ளியில் மது அருந்தும் மாணவிகள்- வீடியோ வைரல்
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், போட்டித் தேர்வு சிறப்பு வகுப்புக்கு வந்த சில மாணவிகள், மற்றவர்கள் சென்ற பின்னர் பள்ளி வளாகத்தில் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. மாணவியின் ஆண் நண்பர் மதுபாட்டில் மற்றும் உணவு வாங்கிக் கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். பரவி வரும் வீடியோவில், ஒரு மாணவி மதுபானத்தை ஊற்றிக் கொடுத்து மற்றொரு மாணவியைக் குடிக்குமாறு வற்புறுத்துவதும், அதற்கு அவர் "நீ குடிடி" எனத் திருப்பிக் கூறுவதும் பதிவாகியுள்ளது. மேலும், யாரோ வீடியோ எடுப்பதைக் கண்டு "ஏண்டி வீடியோ எடுக்குறீங்க?" எனக் கேட்பதும் அதில் உள்ளது.
நாகர்கோவிலில் பள்ளி வளாகத்தினுள் வகுப்பறைக்கு முன்பே மது அருந்தும் பொட்டு மாமா.வின் நண்பீஸ்..!
— Chitra Chinna (@Chitra41882129) August 14, 2026
ஆன்லைனில் விற்பனை செம கலெக்சன் போல போட்டு மாமா pic.twitter.com/4zYFE0qpOn
அதே பள்ளியில் மாணவன் ஒருவன் சக மாணவர்களுக்குப் 'போதை சாக்லேட்' வழங்கி வருவதாகவும் புதிய புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தக்கலை போலீசார் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளில் மதுபானம், போதைப்பொருள் விற்பனை குறித்து தீவிர சோதனை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

