வகுப்பறை இல்லாததால் மொட்டை மாடியில் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம்
Jul 11, 2025, 17:59 IST1752236975170
திருப்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இடம் இல்லாததால் மொட்டை மாடி, கலை அரங்கப் பகுதிகளில் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 18 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. பள்ளியில் மொத்தம் 1238 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனால் போதிய வகுப்பறைகள், மைதானம், கழிப்பறை வசதிகள் இன்றி உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மொட்டை மாடி, நடைபாதையில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக அருகில் உள்ள தொடக்க பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மழை காலத்தில் மிகவும் சிரமமாக உள்ளதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


