மாணவர்கள் ஏமாற்றம்..! இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை..!
Mar 22, 2025, 05:30 IST1742601648000

இன்று 22 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி வேலை நாளாக அறிவித்துள்ளது. அதுவும் வெள்ளிக்கிழமை கால அட்டவணைப்படியே பள்ளி இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் மாவட்டந்தோறும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், ஆதிதிராவிட, தனியார், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளும் இன்று 22 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவே செயல்படும். மேலும், வெள்ளிக்கிழமைக்கான கால அட்டவணைப்படியே பள்ளி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.