"நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது" - விஜய்
Jul 3, 2024, 10:17 IST1719982061734

சென்னை திருவான்மியூரில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவுக்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய்.
பின்னர் கல்வி விருது வழங்கும் விழா அரங்குக்கு வந்த தவெக தலைவர் விஜய் 12ம் வகுப்பில் சாதித்த திருநங்கை மாணவி நிவேதா அருகில் அமர்ந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அவரை வாழ்த்தினார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை தான் முழு மனதுடன் ஏற்கிறேன். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கிராமப்புற பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு மாணவ உரிமைகளுக்கு எதிரானது என்றார்.