நீட் தேர்வு அச்சம்- விழுப்புரம் மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதிக்கு அருகிலுள்ள தாதாபுரம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் - கிருஷ்ணவேணி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவர்களது இரண்டாவது மகள் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் மருத்துவம் படிக்க வேண்டுமென புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வெழுத 2வது ஆண்டாக பயிற்சிமேற்கொண்டு வந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மே மாதம் 4 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. WWW.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும் எனவும், தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடப்பட்டது.