ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை

 
ஆன்லைன் ரம்மி

சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்த மருத்துவ மாணவர் தனுஷ் ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடிய தனுஷ், தந்தையிடம், ரூ.24 ஆயிரம் பணம் கேட்டதாகவும், அதற்கு தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி அவரது தந்தை ரூ.4,000 கொடுத்த நிலையில் வீட்டின் அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து தனுஷ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.