சிறுநீரில் ரத்தம் கலந்து வந்ததால் அதிர்ச்சி! விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

 
suicide suicide

எட்டாம் வகுப்பு மாணவன் விடுதியில் ஜன்னல் கம்பியில் டவலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரக்கோணத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

suicide


அரக்கோணத்தில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் விஷ்ணு கணேஷ் 13 என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளியில் சேர்ந்தார். இவரது தாய், தந்தையர் பிரிந்து வசித்து வரும் நிலையில், அவர் பள்ளி விடுதியில் தங்கியிருந்தார். மாணவன் விஷ்ணு கணேஷுக்கு சிறுநீரில் ரத்தம் கலந்து வந்துள்ளது, இதனால் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மீண்டும் அவர் விடுதியில் தங்கி இருந்துள்ளார். வகுப்புகள் முடிந்து மாணவர்கள் விடுதிக்கு சென்றபோது அங்குள்ள ஜன்னலில் தவலில் தூக்கு மாட்டி நின்ற நிலையில் இறந்து கிடப்பதை மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மாணவன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாயென போலீசார் விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியது. சடலத்தை மீட்ட போலீசார், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து நகர காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.