அரசுப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து- வானதி சீனிவாசன் கண்டனம்
சிவகங்கை நிரஞ்சான் கிராமத்தில் பள்ளி வகுப்பறையிலேயே வைத்து 12-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சக மாணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தனிப்பட்ட பகை காரணமாக மாணவன் கத்தியால் குத்தியாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் “சிவகங்கை மாவட்டம் மல்லல் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களுக்கிடையேயான தகராறில் சகமாணவர் கத்தியால் தாக்கப்பட்டதாகவும், அதேபோல் நேற்\ய தினம் திருச்சி திருவெறும்பூர் அரசன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகள் தவெக அரசில் தமிழகத்தின் கல்விச் சூழல் குறித்து கடும் கவலையை ஏற்படுத்துகின்றன.
அரசுப் பள்ளிகள் என்றாலே சாதனை மாணவர்கள் என்ற நிலை மாறி சமீப காலங்களாக தொடர்ந்து அவப் பெயரை பெற்று வருவது பள்ளிக் கல்வித் துறை மாணவர்கள் நலனில் காட்டும் அலட்சியப் போக்கே காரணமாகும். கல்விக்கூடங்கள் அறிவை வளர்க்கும் இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, ஆயுதங்களும் வன்முறையும் நுழையும் இடங்களாக மாறக் கூடாது. செல்லும் பள்ளிகளிளெல்லாம் ரீல்ஸ் எடுக்கும் தவெக-வினர் அதில் காட்டும் அக்கறையை மாணவர்கள் நலனில் காட்டியிருந்தாலே இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம்.எனவே அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பள்ளிகளில் மனநல ஆலோசனை, நன்னெறிக்கல்வி, மாணவர்களிடையே நட்பு மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கும் சிறப்பு விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் விதமாக துரித நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

