நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

 
ச்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் மறுதேர்வு காரணமாக ஏற்பட்ட விரக்தியால் வெள்ளாளபுரத்தைச் சேர்ந்த 20 வயதான மாணவி கோபிகா தற்கொலை செய்துகொண்டார். கடந்த முறை நீட் தேர்வு எழுதிய போது தோல்வியடைந்த மாணவி, இந்த முறை எழுதிய தேர்வு ரத்தானதால் விரக்தியில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கோவையை சேர்ந்த அனு கீர்த்தனா தற்கொலை செய்துகொண்டார் குறிப்பிடதக்கது.

இதுதொடர்பாக  கோபிகாவின் தந்தை சேகர் அளித்த பேட்டியில், “நீட் மறுதேர்வால் மகளுக்கு மன உளைச்சல் இருந்ததால் என் மகள் தற்கொலை செய்துகொண்டார். 2 ஆண்டுகளாக படித்து ஏற்கனவே ஒரு முறை நீட் தேர்வு மகள் எழுதியிருந்தார்” என்றார்.