கடற்கரையில் வைர மோதிரத்தை தொலைத்த மாணவி- 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்ட போலீஸ்

 
Ring

புதுச்சேரி கடற்கரை சாலையில் உத்திரப்பிரதேச சுற்றுலா பயணி தொலைத்த வைர மோதிரத்தை, ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள், போலீசார் இணைந்து கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.  

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் அனில் கண்ணா. இவர் சில தினங்களுக்கு முன் தனது மகள் அஸ்தா கண்ணாவுடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். தனியார் விடுதியில் தங்கி, சுற்றுலா தலங்களை கண்டுகளித்தனர். புதுச்சேரி கடற்கரைக்கு சென்ற இருவரும், தலைமை செயலகம் எதிரே கருங்கல் பாறையில் அமர்ந்து பேசினர். பின்னர் விடுதிக்கு சென்று பார்த்தபோது, அஸ்தா கண்ணா கை விரலில் அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான வைர மோதிரத்தை காணவில்லை. உடனே தாங்கள் நடந்து சென்ற பாதையில் தேடிப் பார்த்தும் மோதி ரம் கிடைக்காததால், பெரியக்கடை போலீசில் புகார் அளித்தனர். 

தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினருடன் இணைந்து கடற்கரைக்கு சென்று மோதிரத்தை தேடினர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு, தந்தை, மகள் இருவரும் அமர்ந்திருந்த,
கருங்கல் பாறைகளுக்கு அடியில் விழுந்து கிடந்த வைர மோதிரத்தை கண்டுபிடித்து, அனில்கண்ணா முன்னிலையில், அஸ்தா கண்ணாவிடம் ஒப்படைத்தனர்.