கடலாடி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
Nov 20, 2023, 11:41 IST1700460711485

அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் தீபக் என விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
10ஆம் வகுப்பு மாணவன் தீபக்கின் உடல் கடலாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது . மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.