ஃபேனை ஆன் செய்த மாணவிக்கு நேர்ந்த சோகம்! அடுத்த நொடியே மரணம்
இராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பலியானார். அவரை காப்பாற்ற சென்ற சகோதரி காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த முனியன் வலசை பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் வர்ஷனா(17) என்ற மாணவி நேற்று மாலை டேபிள் ஃபேனை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதனால் கத்திக் கொண்டிருந்தபோது, இதனை கவனித்து அவரது சகோதரி ரட்ஷதியா (18) முயன்ற போது இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது இருவரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வர்ஷனா உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் ரட்ஷதியா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த பள்ளி மாணவியன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


