வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புவனேஸ்வரி 12 ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி புவனேஸ்வரி, உடுமலை பாபுகான் வீதியில் உள்ள சமூக நீதி அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் இந்த அரசு பெண்கள் விடுதியில் 70 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளியில் இருந்து உணவு இடைவேளையின் பொழுது அனைத்து மாணவிகளும் விடுதிக்கு வந்து மதிய உணவு அருந்திவிட்டு மீண்டும் பள்ளிக்கு திரும்பிசென்று விட்டனர்.
இந்நிலையில் தனது வகுப்பில் அமர்ந்திருந்த புவனேஸ்வரி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட ஆசிரியர்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி இறந்து வட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி திடீரென வகுப்பறையில் இறந்தது ஆசிரியர் மற்றும் மாணவிகளிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

