மாணவன் சின்னதுரை சாதியத்தைத் திருப்பித் தாக்கியுள்ளான் - திருமா பூரிப்பு!!

 
thiruma

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முனியாண்டி அம்பிகாபதி தம்பதிகளின் மகனான சின்னதுரை அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சாதிரீதியான மோதலில் , சில மாணவர்கள் சின்னதுரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக  வெட்டினர்.  இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்து  பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை பிளஸ் 2 தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். முழுமையான உடல்நலம் பெறாததால் உதவியாளர் மூலமாக மாணவர் பொதுத்தேர்வை எழுதியிருந்தார். 

 

tn

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நாங்குநேரி சின்னதுரை தனக்கு நேர்ந்த இழிவுகளையும் தாக்குதல்களையும் 
அதனால் ஏற்பட்டுள்ள 
ஆறாத வடுக்களையும் 
தீராத வலிகளையும் 
தனது கல்வி வேட்கையென்னும் பெருநெருப்பால் பொசுக்கியுள்ளான். இவனுக்குள் அம்பேத்கர் என்னும் தீ கங்கு கனன்று கொண்டுள்ளது. 
அதன் வெளிப்பாடுதான் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவன் பெற்றுள்ள மதிப்பெண்கள்.


தொலைபேசியில் 
அவனைத் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். 
"சென்னையில் தங்கிப் படிக்கலாம் வா "  என்றேன். " நெல்லை சேவியர் கல்லூரியில் படிக்க விரும்புகிறேன் அண்ணா" என்று உடனே விடையிறுத்தான். அவனது குரலில் தெளிவும் உறுதியும் தெறித்தது. 

அவனுடைய தாயாரிடமும் எனது மகிழ்வைப் பகிர்ந்துகொண்டேன். 

சாதிவெறித் தாக்குதலிலிருந்து அவனைக் காப்பாற்றிய அவனுடைய தங்கை சந்திராவிடம் நான் நலம் விசாரித்ததாகச் சொல் என்று கூறினேன்.

பி.காம் படித்து பின்னர் ஆடிட்டராக வர வேண்டும் என்கிற அவனது கனவு நனவாகட்டும்.

தம்பி சின்னதுரை, தனது
இந்த சாதனையின் மூலம் சாதியத்தைத் திருப்பித் தாக்கியுள்ளான்.என்று குறிப்பிட்டுள்ளார்.