விஜய் ஸ்டைலை கையிலெடுக்கும் திமுக! ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு விழா

 
vijay

10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

result

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.53%  அதிகரித்திருக்கிறது. இதேபோல் தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 91.55% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.58% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவிகள்  94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதங்களில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளாகவும், தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவர்களும் கௌரவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 100% தேர்ச்சி பெற்ற 1761 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து பாராட்டு விழா நடத்தப்படுகிறது. கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்ட  அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு, கலந்துரையாட பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற 5 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட உள்ளது.