தண்ணீர் தொட்டியில் விழுந்த 3ம் வகுப்பு மாணவன்- காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியரும் பலி

 
கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய சென்ற 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி..

ஒசூர் அருகே விவசாய நீர்சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்த 3 வகுப்பு மாணவனை காப்பாற்ற சென்ற பள்ளி தலைமையாசிரியரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு 3 வகுப்பு படித்து வந்த நித்தின்(8) என்னும் மாணவர் மதிய உணவு இடைவெளியின் போது பள்ளியின் பின்புறம் விவசாய பாசனத்திற்காக தொட்டி அமைத்து நீர் சேகரிக்கப்பட்டு வரும்நிலையில், அதில் நிதின் தவறி விழுந்ததாக கூறப்படும் நிலையில் பள்ளியில் இருந்த தலைமையாசிரியர் கவுரி சங்கர் ராஜா(53) என்பவர் தண்ணீர் தொட்டியில் இருந்த சிறுவனை மீட்க சென்றவரும் வெளியே வராத நிலையில் சிறுவன், பள்ளி தலைமையாசிரியர் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த நித்தின் பெற்றோர், உறவினர்கள் சடலத்தை பார்த்து கதறி அழுந்து வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சடலத்தை நீரில் இருந்து மீட்ட பாகலூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்