"பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

பாஜகவின் பொய் கட்டுக்கதைகள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

stalin

பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, "அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா? தமிழ்நாட்டைப் பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார் தடுப்பதற்கு?பொய்களும், வாட்சப் கதைகளும்  பாஜகவின் உயிர் மூச்சு;பாஜகவின் பொய் கட்டுக்கதைகள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது.

stalin

மகள்களைப் பெற்றவர்களை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பதறவைத்தது; பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுப்பதை போல் அதிமுகவினர் நாடகம் ஆடினர். தங்கள் கோட்டை என மேற்கு மண்டலத்தைக் கூறும் அதிமுகவினர் ஏதாவது நன்மை செய்தனரா?; கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அதிமுக அமைச்சர், டிஜிபி ஆகியோர் இருந்தனர்" என்றார் .