நரேந்திர மோடி மீதும், பாஜகவினர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திடுக - இந்திய தேர்தல் ஆணையருக்கு - சிபிஐ (எம்) கடிதம்!!

 
K balakrishnan

கோவையில் பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பள்ளிக் குழந்தைகளை ஈடுபடுத்திய விவகாரத்தில் நரேந்திர மோடி மீதும், பாஜகவினர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

tn

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாகனப் பேரணியில் பங்கேற்றார். இந்தப் பேரணியில் சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

balakrishnan

இந்நிலையில் கோவையில் நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பள்ளிக் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பல மணி நேரம் கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்த பாஜகவினர் மற்றும் நரேந்திர மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்  இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்