தெருவிற்கு மோடி பெயர் சூட்டிய பாஜகவினர்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் நகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி தெருவிற்கு பெயர் சுட்டிய பாஜகவினரால் பரபரப்பு எற்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட 19 வார்டு பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு வையாபுரி நகர் என்று இருந்த பெயரை மாற்றி நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அந்த தெருவிற்கு நரேந்திர மோடி தெரு என்று பாஜகவினரால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு அனுமதி பெற்று வையாபுரி நகர் என்று பதிவு பெற்ற ஒரு தெருவினை தற்போது நரேந்திர மோடி தெரு என்று பெயர் மாற்றம் செய்து பெயர் பலகை வைத்தது பகுதி மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது
இதுகுறித்து நகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறாமல் தெருவிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் உடனடியாக நகராட்சி அதிகாரிகள் மூலமாக அந்த பெயர் பலகை அகற்றப்படும் என்றும் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார்.