சிறுவனை துரத்திச் சென்று கடித்த தெரு நாய்

 
ச்

திருவள்ளூரில் சாலையில் நடந்து சென்ற 6 வயது சிறுவனை தெரு நாய் கடித்ததில் சிறுவன் திருவள்ளூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர் ரோஜா தெரு பகுதியில் சாலையில் நடந்த சென்ற ஆறு வயது சிறுவன் நிஷாந்தை தெரு நாய் துரத்தி அவரதுகால்,கைகளில் கடித்துள்ளது. இதனால் அவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தெரு நாயிடமிருந்து சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அவருக்கு அங்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்,

திருவள்ளூர் மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லைகள் அதிகரித்து உள்ளதால்  நாய்கடி சம்பவமும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது, இதனால் மாவட்டத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.