தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோக்கா புயல்’.. 14ம் தேதி கரையைக் கடக்கும் என தகவல்..

 
புயல்


வங்கக்கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல் தீவிர புயலாக மாறியது.

வங்கக்கடலில் இன்று காலை உருவான மோக்கா புயல்  மாலை 5.30 மணி அளவில்  தீவிர புயலாக மாறியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மே 14ஆம் தேதி முற்பகலில்  தென்கிழக்கு வங்கதேசம் - மியான்மர் இடையே மோக்கா புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

மழை

மீனவர்கள் வங்காளவிரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு   மே 14 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோக்கா புயல் கடந்த 6மணி நேரத்தில் மணிக்கு 11கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது என்றும், 
வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக வலுவடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  இதனால் வருகிற 15ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.