ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் நிறுத்தம்?

 
ration shop

நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

ரேஷனில் இந்த மாசம் "பாமாயில்" வாங்கிட்டீங்களா? அப்ப முதல்ல இதை  செய்யுங்க..இத்தனை நாளா தெரியாம போச்சே | Health and lifestyle news, Do you  know how ration shop palm oil ...

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் மானியம் தான்.

இந்நிலையில் நுகர்பொருள் குடோன்களில் ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான பருப்பு மற்றும் பாமாயில் இருப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிய டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகாததால் கையிருப்பு காலியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.